AKILAM WELFARE TRUST குளோஸ்டர்ஷையர்தமிழ் ● ENGLISH
குளோஸ்டர்ஷையர் · ஐக்கிய இராச்சியம்

நம் மொழி. நம் மரபு. நம் எதிர்காலம்.

மொழியால் இணைவோம்; பண்பாட்டால் வளர்வோம். தமிழ்மொழிக் கல்வி, மரபுப் பண்பாடு, சமூக நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே அகிலம் அறப்பணி நிறுவனம்.

தமிழர் மரபில் வேரூன்றி, எல்லாத் தலைமுறையினரையும் இணைப்போம்.

Akilam Welfare Trust crest
AKILAM அகிலம்
எமது நோக்கம்

தமிழின் அடையாளத்தைப் பேணி, அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்போம்.

தமிழில் வாசிக்கவும் எழுதவும் கற்பதிலிருந்து தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் பங்கேற்பதுவரை, கல்வி, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை எமது பணியின் மையமாகக் கொண்டுள்ளோம்.

அகிலத்தின் கொள்கைகள்

எமது அடிப்படைக் கொள்கைகள்

கல்வி, பண்பாடு, சமூக நலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விரிவான நோக்கங்களை அகிலத்தின் அமைப்புவிதிகள் வகுத்துள்ளன.

01

தமிழ்மொழியும் கல்வியும்

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தமிழைப் படிக்கவும் எழுதவும் பேசவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளை வளர்த்தல்.

02

மரபும் பண்பாடும்

தமிழர் கலைகள், மரபுகள், பண்பாட்டு அறிவு ஆகியவற்றைத் தலைமுறைகள் கடந்து பேணுதல்.

03

சமூக ஒற்றுமையும் நலனும்

சமூகப் பங்கேற்பு, சமவாய்ப்பு, பரஸ்பர உதவி, நல்வாழ்வு ஆகியவற்றை ஊக்குவித்தல்.

அகிலம் தமிழ்க் கலைக் கல்விக்கூடம்

ஒரு மொழி; பல தலைமுறைகளை இணைக்கும் பாலம்.

எமது கல்விக்கூடத்தில் தற்போது தமிழ்மொழி வகுப்புகள் மட்டுமே நடைபெறுகின்றன. மொழித்திறனையும் பண்பாட்டு அடையாளத்தையும் வளர்ப்பதே அவற்றின் நோக்கம்.

தற்போது தமிழ்மொழி வகுப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அகிலத்தின் செய்திகள்

செய்திகளும் அறிவிப்புகளும்

அகிலத்தின் அறிவிப்புகள், நிகழ்வுகள், நிதித் திரட்டல் செய்திகள் ஆகியவை வெளியிடப்படும் போது இங்கே இடம்பெறும்.

புதிய செய்திகள்
அகிலத்துக்கு ஆதரவளியுங்கள்

உங்கள் உதவி எமது நோக்கங்களுக்கு வலுசேர்க்கும்.

கல்வி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுக்கும் அகிலத்தின் இலாப நோக்கற்ற முயற்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம்.

நன்கொடை வழங்க

பாதுகாப்பான கட்டணப் பக்கத்தில் விரும்பிய தொகையைத் தேர்ந்தெடுக்கலாம்.